மேலும் இரண்டு புதிய படங்களில் தனுஷ்!

Photo of author

By Parthipan K

மேலும் இரண்டு புதிய படங்களில் தனுஷ்!

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதில் தமிழ்மொழி கடந்து இந்தி, ஆங்கிலப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்தியில் தயாரிக்கப்பட்ட அத்ரங்கி ரே’ படத்தின் வெற்றியால் மேலும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் தற்போது வரிசையாக பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தனுசின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தனுஷ் தற்போது ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

2013-ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் வெளியான ‘ராஞ்சனா’ படம் மூலம் தனுஷ் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அத்ரங்கி ரே’ படத்துக்காக ஆனந்த் எல்.ராய் – தனுஷ் கூட்டணி இணைந்தது. இதில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் இவர்களுடன் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

‘அத்ரங்கி ரே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதே கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆனந்த் எல்.ராய் இயக்குநர் பொறுப்புடன் தயாரிப்பையும் மேற்கொள்ளவிருக்கிறார். இதையடுத்து மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல இந்தி பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.