10 முறைக்கு மேல் பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் வெற்றி கண்டு சாதனை படைத்தவர் பிரபல டென்னிஸ் விளையாட்டு “வீரர் ரஃபேல் நடால்”. இளம் வயதில் இருந்தே டென்னிஸில் ஆர்வம் கொண்ட இவர், டென்னிஸ் போட்டிகளில் பல உலக சாதனைகளை படைத்து டென்னிஸ் விளையாட்டில் முக்கிய நட்சத்திர வீரராக விளங்குகிறார். “இருபது ஆண்டுகளுக்கு மேல்” டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார்.
தற்போது 38 வயதாகும் இவர் “டேவிஸ் கோப்பை விளையாட்டு போட்டியில்” தான் தனது ஆட்டத்தை தொடங்கினார். அதே டேவிஸ் கோப்பையின் கடைசி போட்டியில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் தனது ஓய்வை அறிவித்ததிலிருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களையும், நன்றியையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது ஓய்வை அறிவித்த டென்னிஸ் போட்டிகளில் பல உலக சாதனைகளை படைத்த “ரஃபேல் நடால்” அவர்களுக்கு “நடிகர் தனுஷ்” அவர்கள் தனது “x” பதிவில் டென்னிஸ் வரலாறு நீங்கள் இடம் பெறாமல் முழுமையடையாது என்பது போல பதிவிட்டு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா படத்தில் வெளியிடப்பட்ட, தனுஷ் படக்காட்சிகளுக்கு தனுஷ் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருக்கிறார், நஷ்டஈடாக “10 கோடி” வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் தனுஷ் தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஃபேல் நடால் ஓய்விற்கு தனுஷ் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டிருப்பது மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் இவரது ஓய்வு அறிவிப்பு வருத்த தக்க செய்தியாக அமைத்துள்ளது. இருந்த போதிலும் இவரது ரசிகர்கள் இவரது சாதனைகளை நினைத்து மகிழும் அளவிற்கு இவரது சாதனைகள் அமைத்துள்ளது.