கேப்டன் மில்லரில் தனுஷின் சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
41
Dhanush Salary in Captain Miller!! Mouth gaping fans!!
Dhanush Salary in Captain Miller!! Mouth gaping fans!!

கேப்டன் மில்லரில் தனுஷின் சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார்.

யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

இவர் திரைப்பட நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்பொழுது பாடகர் ,பாடலாசிரியர் ,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றார்.

தனுஷ் ஆடுகளம் படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனார்.அதன்பின்பு அவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

அந்த வகையில் தற்பொழுது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்னும் திரைபடத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பழங்கால வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தனுஷின் சம்பளம் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அதனால் இந்த படத்திற்கு தனுஷிற்கு மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

author avatar
Parthipan K