தனுஷின் வாத்தி ரிலீஸ் தள்ளிவைப்பா? தெலுங்கு தயாரிப்பாளர்களால் அவதிப்படும் தமிழ் ஹீரோக்கள்!

0
298

தனுஷின் வாத்தி ரிலீஸ் தள்ளிவைப்பா? தெலுங்கு தயாரிப்பாளர்களால் அவதிப்படும் தமிழ் ஹீரோக்கள்!

நடிகர் தனுஷ் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.

தனுஷின் பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. ஆனால் முதல் முறையாக அவர் நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

கல்வி வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தெலுங்குல் சார் என்ற பெயரில் உருவாகும் இந்த திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த ரிலீஸ் தேதி தள்ளிவைகக்ப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஏனென்றால் டிசம்பர் 2 ஆம் தேதி தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறதாம். அதனால் தெலுங்கில் போதுமான திரைப்படங்கள் கிடைக்காத சூழல் உள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே போல விஜய்யின் வாரிசு திரைப்படத்துக்கும் தெலுங்கில் பொங்கலின் போது தியேட்டர்கள் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. இரு மொழிப் படமாக உருவாவதில் இப்படி ஒரு புதிய சிக்கலை நடிகர்கள் இப்போது எதிர்கொள்கின்றனர்.

Previous articleஎடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Next articleபூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here