தவெக – அதிமுகவுடன் கூட்டணி!! பவன் கல்யாண் பாணியை பின்பற்றும் விஜய்!!

Photo of author

By Rupa

தென்னிந்திய திரையுலக  முன்னணி நடிகர்களில் ஒருவர்  பவன் கல்யாண். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு  ஜன சேனா என்ற தனது கட்சியை நிறுவினார்.  இந்த கட்சி 2019 ஆம் ஆண்டு இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஆந்திராவின் கசுவாக்க மற்றும் பிமாவரம் தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார்.

அடுத்ததாக  ஆந்திராவில் 2024 சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது ஜன சேனா கட்சியை கூட்டணி அமைத்தார். இந்த தேர்தலில் 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளை கைப்பற்றினார். பாஜக கூட்டணியில் 25 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார் பவன் கல்யாண்.

தவெக மாநாட்டில் பேசிய விஜய் அவர்கள்,  திமுக மற்றும் பாஜக குறிப்பிட்டு விமர்சனங்களை  செய்த விஜய், அதிமுகவை பற்றி எவ்வித கருத்துகளையும் கூறவில்லை. மேலும் 2026 -ல் தவெக தனித்து போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்  ஆட்சி அமைக்கும் என்று, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி பங்கில் இடம் உண்டு என்று கூறியிருந்தார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவை தோற்கடிக்க அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் . என்ற நிலை உள்ளது.