அதிமுகவில் தினகரனின் முக்கிய புள்ளி! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் மாறி மாறி சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றங்களில் தனக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால், அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து வந்த சூழலில் நேற்று எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து ஆணையிட்டதால் அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் அதிமுகவுக்கு தாவப் போவதாக தகவல் வெளியானதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அமமுகவில் இருந்து அவர் நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் இன்று மதியம் 12 மணிக்கு அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியிலிருந்து வெளியேறியதால் வட போச்சே என்ற நகைச்சுவை வசனத்தை அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்