பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

Photo of author

By Sakthi

பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

கொரோனா தொற்று ஆரம்பத்திலிருந்தே அந்த நோயினால் பொது மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து பின்னர் குணமடைந்து வந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் அமைச்சர்கள் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களும் இந்த நோய் தொற்றிலிருந்து தப்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் தாய் தந்தைக்கு இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோய்த்தொற்று இருக்கு நடுவில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது கிரிக்கெட் வீரர்களும் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து அதன் பிறகு போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ‘தல’ மகேந்திர சிங் தோனி அவர்களின் பெற்றோர்களான பான் சிங் தேவி தேவி ஆகியோருக்கு இந்த நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது இதனை தொடர்ந்து தோனியின் பெற்றோருக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் நாடித் துடிப்பின் அளவு போன்றவையும் நிலையாக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்து இருக்கிறது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று கல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட இருக்கின்ற நிலையில் தோனியின் பெற்றோருக்கு நோய்த்தொற்றின் பாதிப்பு உறுதியாக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.