ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் இளம் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க். இவர் ஐ பி எல் போட்டியின் போது ஒரு போட்டியில் தோனி என்ற ஒரு பெயருக்கு உள்ள கூட்டத்தினை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2024 ம் ஆண்டு பிரிதிவ் ஷா க்கு பதிலாக களமிறக்கப்பட்டவர் ஜேக் பிரேசர் மெக்கர்க் இவர் அந்த ஆண்டு ஐ பி எல் ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். அவர் தற்போது ஆஸ்திரேலியா அணியில் விளையாடி வருகிறார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி பற்றிய ஐ பி எல் நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில் அவர் சென்னை அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் அவர் களமிறங்கினார். அப்போது மைதானத்தின் உச்சகட்ட சத்தத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.
அதுமட்டுமல்லாமல் அவர் காலத்தில் அனைத்து திசைகளிலும் பந்தினை பறக்க விட்டார் ஒவ்வொரு சிக்சருக்கும் விண்ணை முட்டும் அளவிற்கு ரசிகர்களின் கரகோஷம் இருந்தது. அவர்கள் போட்ட சத்தத்தில் நான் என் காதுகளை மூடி கொண்டேன் அந்த அளவிலான சத்தத்தில் என் தலை பாதிக்கப்பட்டது. இது போன்ற ஒரு ரசிகர்கள் கரகோஷத்தை நான் அதுவரை பார்த்ததில்லை.
எங்கள் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் ப்ளூ ஜெர்சியை மைதானம் முழுக்க நிரம்பி இருக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் எதிரில் ஆடியது சென்னை அணி அதனால் மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியை தான் நான் பார்த்தேன் ஜெர்சி முழுவது தோனி என்று இருந்தது. தனி ஒரு மனிதர் களத்திற்கு வரும்போது மக்கள் மூலம் வான வேடிக்கை நிகழ்வதை அங்குதான் பார்த்தேன் அது நம்ப முடியாத ஒரு விஷயமாக இருந்தது என கூறினார்.