இயக்குனரை நேரில் சந்தித்து ஷாக் கொடுத்த தோனி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!  

Photo of author

By Jeevitha

இயக்குனரை நேரில் சந்தித்து ஷாக் கொடுத்த தோனி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!  

Jeevitha

Dhoni met the director in person and gave a shock!! Video going viral on the internet!!

இயக்குனரை நேரில் சந்தித்து ஷாக் கொடுத்த தோனி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர். இவர் திரைப்பட இயக்குனர் , நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் முதலில் 2012 ஆம் ஆண்டு போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பின் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் , காட்டுவாகுல இரண்டு காதல் படத்தை இயக்கினார். அதன் பின் அவர் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவரை நேரில் சந்தித்து அவருக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் அணித்து இருந்த சட்டை மீது தோனி ஆட்டோகிராப் போட்டு தந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சிவன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சிவன் எனக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரரை சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தார். மேலும் தோனி கையை பிடித்து சிவன் முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.