பரபரப்பை கிளப்பிவரும் தோனியின் முகப்புபடம்!! காரணம் இதுதானாம் வெளிவந்த தகவல்!!

0
129
Dhoni's cover image is creating sensation!! The reason is the information that came out!!
Dhoni's cover image is creating sensation!! The reason is the information that came out!!

பரபரப்பை கிளப்பிவரும் தோனியின் முகப்புபடம்!! காரணம் இதுதானாம் வெளிவந்த தகவல்!!

இந்தி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வைத்துள்ள இன்ஸ்டாகிராம் முகப்பு படம் பரபரப்பை  கிளப்பி உள்ளது.

அவரது முகப்பு படம் பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது.

கிரிக்கெட் உலகில் கூல் கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நீண்ட காலமாக கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் இவர் டி20 உலக கோப்பை, மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்து பெருமை சேர்த்தவர். இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ்நாட்டு ரசிகர்கள் இவரை தல என வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நமது இந்திய திருநாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக ஏராளமான செய்திகள் வெளிவந்த உள்ளம் வண்ணம் உள்ளன. இதையடுத்து கேப்டன் தோனி இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

அவரது இன்ஸ்டாகிராம் முகப்பு படமானது “பாரதியானாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்” என்ற வாசகர் வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் பாரத் என்ற பெயர் மாற்றத்திற்கு ஆதரவளிப்பதாக தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதனுடைய உண்மை தன்மை வெளிவந்துள்ளது.

அதன்படி கடந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இதனை முகப்பு படமாக வைத்துள்ளார் என்பதுதான். அப்போது வைத்த தனது முகப்பு படத்தை தோனி தற்போது வரை மாற்றாமல் இருப்பதால்தான் இத்தகைய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிளையாட்டாக  பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!!
Next articleமாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!!