தோனியின் பிரமாண்ட விவசாய தோட்டம் !! பிசினஸ் ல் ஆர்வம் காட்டும் தோனி!!
மகேந்திர சிங் தோனியினை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார் என்றே கூறலாம். ஏன் எனில் இந்திய கிரிகெட்டினை உலகத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் வீரர். கடந்த 2011ம் ஆண்டில் உலக கோப்பையில் இந்தியா உலக கோப்பையை வென்றதில் தோனிக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்படியாக கிரிக்கெட் வீரராகவும் கூள் கேப்டனாகவும் வலம் வந்தவர் தோனி. பின் அறக்கட்டளை மூலம் பல உதவிகளையும் செய்து வருகின்றார்.
கடந்த 2016ம் ஆண்டில் தோனி செவன் (7) என்ற லைஃப் ஸ்டைல் பிராண்டை அறிமுகப்படுத்தினார். அவரின் ஜெர்சி நம்பரான இந்த செவன் மூலம், காலணிகள் மற்றும் ஆடைகள் வணிகத்தினை செய்து வருகின்றனர். மேலும் தோனி ரித்தி குழுமத்தின் ஆர் எஸ் செவன் லைஃப் ஸ்டைல் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
ரித்தி குழுமத்தின் ரித்தி ஸ்போர்ட்ஸ்-லிம் சந்தை பங்குகளிலும் தோனி பங்குகளை வைத்துள்ளார். ஸ்டார்டப் நிறுவனமான காட்டபுக்-கிலும் முதலீடு செய்துள்ளார். மேலும் ஸ்டார்டப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி உள்ளார். இந்த நிறுவனத்தில் தோனி எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்ற விவரங்கள் வெளிவரவில்லை.
மேற்சொன்ன பல வணிகங்களை தவிர, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் 43 ஏக்கரில் பிரம்மாண்டமாக அவர் விவசாயம் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் தோனியின் விவசாய முறை வழக்கமான விவசாயமாக அல்லாமல் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்து வருவதாகவும், இதன் மூலம் பல காய்கறிகள் பலங்கள் என உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
அந்த ஆர்கானிக் தோட்டத்தில் குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி, பட்டானி, தக்காளி மற்றும் முட்டைகோசுகள் போன்றவற்றை விளைவித்து வருவதாகவும், இதன் மூலம் தோனி நல்ல வருமானத்தினை ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.