தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

0
117

இந்திய கிரிக்கெட் வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தோனியின் இந்த முடிவிற்கு அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து தோனியின் முடிவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில், “சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியவரும், இந்திய நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப் கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் வரலாற்றில் குறிக்கப்படும். மேலும் தோனியின் புகழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleதமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை
Next articleசெல்வராகவன் நடிப்பில் ‘சாணி காயிதம்’ படத்தின் மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக்!! ஜோடி சேர்ந்த பிரபல நடிகை!!