மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

0
200

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கருத்து வேறுபாட்டால் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது.

விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் கௌதம் மேனனின் பொருளாதார நெருக்கடி மற்றும் விக்ரமோடு அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல் ஆகியவற்றால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டியில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது விக்ரம் கௌதம் மேனன் சந்திப்பு நடந்து இப்போது படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் விரைவில் மீதமுள்ள காட்சிகளையும் படமாக்கி ரிலீஸ் வேலைகளை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி மீதிப் படத்தை முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கௌதம் மேனனே தயாரித்து இயக்கியுள்ளார். முதலில் இந்த படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அவர் விலகியதை அடுத்து விக்ரம் ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த இந்தபடத்தைப் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவிரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!
Next articleபிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here