விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!

0
228

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!

விரைவில் ஆவின் நிறுவனத்திலிருந்து ஆவின் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பால்வளத் துறை அமைச்சர் கூறியதவாறு: தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும்,இதனால் குறைந்த விலையில் மக்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டல் விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.மேலும் தமிழ்நாட்டில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளதாகவும்,இந்த 28 பிளான்ட்டுகளில் இருந்து 1 மற்றும் 1/2 லிட்டர் குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களில் ஆவின் நிறுவனம் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அவின் பால் பாக்கெட்டுகளில்,திரைப்படங்களின் விளம்பரங்கள் இடம் பெற ஆலோசனை செய்து வருவதாகவும் பால்வளத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது ஆவின் பால் பாக்கெட்களில் செஸ் ஒலிம்பியாயிடு விளையாட்டிற்கான விளம்பரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!
Next articleமீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here