சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!! உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும்!!

Photo of author

By Priya

சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!! உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும்!!

சர்க்கரை வியாதி உடையவர்கள் ஏன் இந்த மூன்று தவறுகளை செய்து விடாதீர்கள் என்றால் இதனால் உள்ளுறுப்புகள் சேதம் அடையவும், டயாலிசிஸ் காம்ப்ளிகேஷன் முதலிய பிரச்சனைகள் வரவும் காரணமாக அமைகிறது.

 

சர்க்கரை வியாதியைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகளால் டயபெட்டிக் நெப்ரோபதி என்ற கிட்னி ப்ராப்ளமும் மற்றும் டயபெட்டிக் நியூரோபதி என்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் வருகிறது.

 

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை வியாதியைப் பற்றிய எந்தவித முழு விழிப்புணர்வும் மக்களிடையே காணப்படாததால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றது.

 

நீங்கள் சர்க்கரை வியாதி உடையவர்களாக இருந்தால் கட்டாயம் இந்த மூன்று தவறையும் செய்து விடாதீர்கள்.

 

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் மயக்கம் வரும் தண்ணீர் தாகம் எடுக்கும் என்று அறிகுறிகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்

 

ஏனென்றால் அறிகுறிகள் வரும் வரை நீங்கள் காத்திருந்தால் உங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

கடந்த 20 ஆண்டுகளில் உள்ள சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு எந்த வித அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை.

 

நீங்கள் அறிகுறிகளுக்காக தாமதிக்கும் காலகட்டம் உங்கள் உடலின் பல பிரச்சனைகளை ஏற்படுவதற்கான காலமாக அமைகிறது.

 

நீங்கள் ஒரு முறை உங்களது சர்க்கரையின் அளவை பார்க்கும் போது அது கூடுதலாக இருந்தால் அதனை மருந்து பொருட்களின் மூலமாகவோ அல்லது நீங்கள் தினசரியில் பின்பற்றப்படும் லைப் ஸ்டைல் மூலமாகவோ அதனை குறைக்க முயற்சி செய்யலாம்.

 

இரண்டாவதாக நீங்கள் செய்யக்கூடாதவை என்னவென்றால் ஒருமுறை சர்க்கரையின் அளவை சரிபார்த்தால் அது எப்பொழுதும் சரியாகத் தான் இருக்கும் என்று எண்ணி அதனை அப்படியே விட்டுவிடுகிறீர்கள்.

 

நீங்கள் மறுமுறை சர்க்கரையின் அளவை சரிபார்க்கும் போது அது நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்து பொருட்களின் ஆகவோ அல்லது டயட்டின் மூலமாகவோ சரியான அளவில் இருக்கும்.

 

அது இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதிக அளவில் ஏறாது என்று கூறுவதற்கு எந்த ஒரு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நீங்கள் உண்ணும் உணவில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உங்களது உடலில் மீண்டும் சர்க்கரை அளவு அதிகமாக ஏற வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

 

ஆகையால் நீங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரையின் அளவை எந்தவிதமான பொருட்களும் எடுத்துக் கொள்ளாமல் பார்க்க வேண்டும் அப்பொழுதும் சர்க்கரையின் அளவு சரியாக இருந்தால் நீங்கள் எந்தவித மருந்து பொருட்களையும் உட்கொள்ள தேவையில்லை.

 

சாதாரணமாக நீங்கள் செய்யக்கூடாதவை என்னவென்றால் ஒரே மருந்து பொருளையே தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது அதாவது சர்க்கரையின் அளவு அதிகமாக மருந்து பொருட்களை அதே அளவில் உட்கொள்வதால் அதனை சரி செய்ய முடியாது.

 

நீங்கள் இதனை சரி செய்ய வேண்டும் என்று எண்ணினால் மருந்து பொருட்களோடு உங்களது உணவுப் பொருட்களிலும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த மூன்று தவறுகளையும் சரி செய்து கொண்டீர்கள் என்றால் சர்க்கரை இல்லாத நபர்களுக்கு என்ன ஆயுட்காலமும் ஆரோக்கியமும் அதே ஆயுட்காலமும் ஆரோக்கியமும் உங்களுக்கும் உண்டு.

 

ஆகவே சர்க்கரை வியாதி உடையவர்கள் கட்டாயமாக இந்த மூன்று தவறுகளையும் செய்து விடவே கூடாது.