இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! 

0
623
did-khushbu-vote-for-india-alliance-shocked-bjp
did-khushbu-vote-for-india-alliance-shocked-bjp

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!!

பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் தான் பிரபல நடிகை குஷ்பு. இவர் இன்று தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் சேர்ந்து அவரது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் குஷ்பு அவரது சோசியல் மீடியா பக்கத்தில் Vote4INDIA என்று பதிவு செய்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவர்களின் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்துள்ளனர். இப்படி உள்ள சூழலில் குஷ்புவின் இந்த பதிவு அவர்களை ஆதரிக்கும் விதமாக இருப்பதாக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் குஷ்பு பாஜகவில் இணைவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். அதனை தொடர்ந்து பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டிருந்த குஷ்பு பாதியிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து குஷ்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவிற்கு வாக்களியுங்கள் என்ற நோக்கத்தில் தான் Vote4INDIA என்று பதிவிட்டேன். நான் ஒருபோதும் இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்ததில்லை” என விளக்கம் அளித்துள்ளார். இதனை கேட்ட பின்னர் பாஜக கட்சி நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

Previous article1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!
Next articleஎன்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!