என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!

0
319
What do you mean I don't have a vote?? Officers gave actor Suri a shock!!
What do you mean I don't have a vote?? Officers gave actor Suri a shock!!

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்கை செலுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் காலை முதலே அவரவர் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர். இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற வந்த நடிகர் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்படி, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். அப்போது அவர் மனைவியின் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும், சூரியின் பெயர் விடுபட்டு இருப்பதாகவும் கூறி சூரியின் மனைவியை மட்டுமே வாக்களிக்க அனுமதித்தனர். அவரை அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

மேலும் இதுகுறித்து சூரி செய்துள்ள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது, “100% வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தேன். ஆனால், வாக்காளர் பட்டியலில் எனது பெயர் விடுபட்டுள்ளது. இது யார் தவறு என்பது தெரியவில்லை. கடந்த தேர்தல்களில் வாக்களித்த நிலையில், இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

என்னால் தான் வாக்களித்து 100% வாக்குப்பதிவை நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் அனைவரும் வாக்களித்து 100% ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூரிக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. தமிழகத்தின் நிறைய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.