“மலைக்கள்ளன்” சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?

0
183
#image_title

1954 ஆம் ஆண்டு வெளிவந்த மலை கள்ளன் என்ற படம் மாபெரும் வெற்றி படமாக எம்ஜிஆர்க்கும் சரி, தமிழ் திரை உலகிற்கும் சரி ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் என்றால் மிகையாகாது.

 

முதன் முதலில் ஒரு தமிழ் படம் குடியரசுத் தலைவரின் விருதை பெற்றது என்றால் அது மலைக்கள்ளன் திரைப்படம். படம் ஐந்து மொழிகளில் வெளியானது தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சிங்களம் வெளியாகி மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.

 

ஆனால் இந்த படம் முதலில் சிவாஜிக்கு பேசப்பட்டதாகவும், சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது அது என்னவென்று பார்ப்போம்.

 

கோயம்புத்தூரில் உள்ள பக்ஷிராஜா ஸ்டுடியோவைச் சேர்ந்த எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இக்கதையின் உரிமை பெறுகிறார். ஏனென்றால் இந்த கதையை எழுதியவர் நாமக்கல் ராமலிங்க பிள்ளை. இது ஒரு கதையாக இருந்தது. அதன் பின் அதன் உரிமையை பெற்று படமாக ஆக்க வேண்டும் என உரிமை பெற்றார் நாயுடு.

 

இந்த கதையை பார்த்தவுடன் முதலில் சிவாஜியை வைத்து தான் எடுக்க வேண்டும் என்று சென்னை வருகிறார் ஸ்ரீராமுலு நாயுடு.

லேனா செட்டியார் அவர்களின் வீட்டில் தான் காத்துக் கொண்டிருக்கிறார். அங்கு சிவாஜியின் கால் ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த ஸ்ரீராமுலு அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

 

அந்த சமயத்தில் 1954 ஆம் ஆண்டு சிவாஜி ஏகப்பட்ட கால்ஷீட் கொடுத்து வைத்திருந்தார். 1954 இல் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருப்பார். கால்ஷீட் கொடுக்க முடியாமல் தவித்த சிவாஜி இவர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்து, லேனா செட்டியார் மற்றும் ஸ்ரீ ராமலு நாயுடு அவர்களை அழைத்து கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன் . உங்கள் ஸ்டூடியோ இருப்பதோ கோயம்புத்தூர். ஒரு படத்திற்காக என்னால் வந்து செல்ல முடியாது. அதனால் அண்ணனுக்கு இப்பொழுது பட வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அண்ணனிடம் கேளுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

 

அதேபோல் சிவாஜி எம்ஜிஆர் இடமும் இந்த மாதிரியான ஒரு கதை வந்துள்ளது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் சொல்லி உள்ளார்.

 

அப்பொழுது டி எஸ் துரைராஜ் அவர்களும் ஸ்ரீ ராமலு நாயுடு அவரிடம், எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்தை நன்றாக செய்து கொடுப்பார் என்று சொல்ல ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.

 

எம்ஜிஆர் எதேட்சையாக லேனா செட்டியார் அவர்களின் கிருஷ்ணா பிக்சர்ஸ் சென்று மலைக்கள்ளன் படத்திற்கு ஹீரோ கிடைத்ததா என்று கேட்க போது கே எஸ் கோபாலகிருஷ்ணன் நீங்கள் தான் ஹீரோ இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

 

லேனா செட்டியார் அவர்களும் ஸ்ரீ ராமலு நாயுடு அவர்களும் எம்ஜிஆரை சந்திக்க சென்ற பொழுது, ஒரு நிபந்தனை வைக்கிறார்கள். என்னவென்றால் கருணாநிதி கதை வசனம் எழுதினால்தான் இந்த படத்தை நான் எடுப்பேன் என்கிறார் நாயுடு.

 

ராமலிங்க பிள்ளையோ காங்கிரசை சேர்ந்தவர். கருணாநிதி திமுக கட்சி, இப்படி எழுத்துக்கள் மாறப்படும் பொழுது பிரச்சனை உருவாகும் என்று ஏற்கனவே கருணாநிதி இந்த படத்திற்கு கதை, வசனம் எழுத மாட்டேன் என்று, ஸ்ரீ ராமலு நாயுடு அவர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அதையும் மீறி கதை வசனம் கருணாநிதி எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார் ஸ்ரீ ராமலு நாயுடு.

 

எம்ஜிஆர் நேரடியாக கருணாநிதி இடம் நீ இந்த படத்திற்கு கதை வசனம் எழுதிக் கொடுத்தது தான் ஆக வேண்டும். இது என்னுடைய திரைப்பட வாழ்வில் ஒரு திருப்பமாக இருக்கும் . இது என்னுடைய வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்று கருணாநிதி இடம் கேட்க, நண்பரின் வார்த்தையை மீறாமல் ஒப்புக்கொள்கிறார் கருணாநிதி.

 

அதன் பின் கருணாநிதி கதை வசனத்தில் எம்ஜிஆரின் நடிப்பில் ஒரு மாபெரும் வெற்றி படமாக வந்ததுதான், இந்த மலைக்கள்ளன். இது ஒரு தமிழ் சினிமாவிற்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

 

இதில் வரும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் ” இந்த உலகிலே என்ற பாடல் எம்ஜிஆருக்கு ஒரு கருத்துக்களை சொல்லும் படியான பாடல்கள் ஒவ்வொரு படத்திலும் இடம் பெற வேண்டும் என்று அனைத்து படங்களிலும் அது மாதிரியான கருத்துக்களை சொல்லும் பாடல்கள் இடம் பெற்ற

தாக சொல்லப்படுகிறது.

 

author avatar
Kowsalya