ஜெய்சங்கர் சொன்ன வார்த்தை! “அவர் ஆயிரம் சொன்னார்”! நான் பல்லாயிரம் செய்தேன்!- மகன்

0
216
#image_title

ஜெய்சங்கர் அவர்கள் ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகர். இவர் இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எம்ஜிஆரை அடுத்து ஒரு சண்டை காட்சிகளில் ஒருவருக்கு பொருத்தமாக இருக்கிறது என்றால் அது ஜெய்சங்கரையே சொல்வார்கள்.

 

அவர் 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டப்பயரும் உள்ளது. அதை போல் இவர் குடும்ப படங்களில் நடித்து வந்ததுனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அதனால் வெள்ளிக்கிழமை ஹீரோ என்று பட்ட பெயரும் இவருக்கு இருந்ததாம்.

 

அப்படி தனது மகனிடம் அவர் சொன்ன வார்த்தையை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் அவருடைய மகன்.

 

ஜெய்சங்கர் அவர்களுக்கு அவருடைய மகன் டாக்டராக ஆகுவதில் மிகவும் சந்தோஷப்பட்டார். அதுவும் கண் மருத்துவராக அவர் இருந்தது ஜெய்சங்கருக்கும் கூடுதல் சந்தோஷமாக இருந்ததாம்.

 

ஜெய்சங்கர் அவரது மகனிடம் அடிக்கடி சொல்லுவாராம், நீ படித்தது பெரிதல்ல! நீ என்னை போல் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

 

அதனால் ஜெய்சங்கர் அவருடைய மகன் அவருடைய பிறந்த நாளுக்கோ அல்லது திருமண நாளுக்கும் அல்லது விசேஷ நாட்களுக்கு இலவசமாக கண் ஆப்ரேஷன் செய்து வருகிறாராம்.

 

ஜெய்சங்கர் அவரது மகனிடம் அடிக்கடி சொல்லுவாராம், ஆயிரம் ஆப்ரேஷன் ஆவது பண்ணி விடுப்பா என்று,

 

அவருடைய ஆசையை நிறைவேற்றி நிஜமாக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதும் அவருடைய மகனின் 25 வருட அனுபவத்தில் “பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன்கள்” செய்து முடித்திருக்கிறாராம். இப்பொழுது அவர் நம்மிடம் இல்லை என்றாலும் இதைப் பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பார், என்பது எனக்கு தெரியும் என்று ஜெய்சங்கர் அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.

 

ஜெய்சங்கர் அவர்களின் 100வது படமான “இதயம் பார்க்கிறது” என்ற படத்தில் கூட கண் பார்வை இழந்தவர் வேடத்தில் நடித்திருப்பார். பொதுவாகவே ஜெய்சங்கர் அவர்களுக்கு கண் தெரியாதவர்களை ரொம்பவே பிடிக்குமாம். அவர்களுக்காக ஜெய்சங்கர் வெளியே தெரியாமல் நிறைய செய்திருக்கிறார். அதே கண் சார்ந்த துறையில் மகன் மருத்துவர் என்பதால் ஜெய்சங்கர் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் , ஜெய்சங்கர் உடைய மகன் வருடத்தில் ஒருமுறை சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறாராம். இது நான் எனது தந்தைக்கு செலுத்தும் நன்றி கடன்.கண் கலங்கியபடி பேட்டி ஒன்று ஜெய்சங்கர் அவர்களுடைய மகன் தெரிவித்திருந்தார்.

author avatar
Kowsalya