நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

0
26
#image_title

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு அவர்களது பெயரில் ஏழைகளுக்கும் உணவளிப்பதை நாம் வழக்கமாக வைத்து வருகிறோம்.

நாம் அளிக்கும் தானம் முன்னோர்கள் உணவாக ஏற்றுக்கொண்டு, நமக்கு ஆசி வழங்குவார்களாம். அதனால், மகாளய பட்சத்தில் நம் முன்னோர்களுக்கு படையலிடுவது முக்கியத்துவமாக இருந்து வருகிறது.

மேலும், அமாவாசை நாளிலும் நம் முன்னோர்களுக்கு படையல் வைத்து தானம் செய்து வருகிறார்கள். முன்னோர்களுக்கு படைக்கும் உணவையும் சாப்பிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்களுக்கு வைக்கும் உணவை நாம் சாப்பிடக்கூடாது.

சரி வாங்க…. எப்படி சரியாக படையிட வேண்டும் என்று பார்ப்போம் –

இறந்த முன்னோர்களுக்கு நாம் படையல் போடும்போது முதலில் வாழைஇலையில் உணவை பரிமாற வேண்டும்.

காய்கறிகளை வலது புறமும், கூட்டு இடது புறமும், இனிப்புகளை முன்புறமாக வைக்க வேண்டும்.

படையல் போடும்போது முன்னோர்களுக்கு பிடித்த ஒரு பதார்த்தை வைக்க வேண்டும்.

இனிப்பு மட்டுமே உங்கள் கைகளில் பரிமாற வேண்டும். மற்ற உணவுகளை கரண்டி பயன்படுத்தி பரிமாற வேண்டும்.

இடது, வலது, முன்புறம், நடுப்புறம் என்ற முறையில் படையல் போட வேண்டும்.

படையிடும்போது, முதலில் நெய் பரிமாறி, அதன் பிறகே சாதம், குழம்பு பரிமாற வேண்டும்.

படையல் போடும்போது நம்முடைய மனநிலை தூய்மையாக இருக்க வேண்டும்.

author avatar
Gayathri