பட்டாசு வெடித்து தீக்காயம் பட்ருச்சா? டோன்ட் பீல்.. கைமருந்து இருக்கையில் கவலை எதற்கு?

Photo of author

By Gayathri

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் பொழுது கொஞ்சம் கவனம் சிதறினாலும் சில சமயம் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுவிடும்.அதேபோல் சமைக்கும் பொழுது சூடான பாத்திரங்களை தொட்டாலோ,கொதிக்கும் எண்ணெய் பட்டாலோ தோலில் தண்ணீர் கொப்பளம் உண்டாகி அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.இந்த தீக்காய புண்கள் மற்றும் கொப்பளங்கள் மீது சேறு அல்லது இங்க் தெளிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.இது முற்றிலும் தவறான பழக்கமாகும்.தீக்காயப் புண்கள் விரைவில் ஆற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

படி 01:

தீக்காயம் பட்டால் அதை உடனே தேய்க்க கூடாது.இதனால் புண்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும்.தீக்காயம் பட்டால் முதலில் குளிர்ந்த நீரில் அப்பகுதியை வைக்க வேண்டும்.

படி 02:

பிறகு கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து நீரில் அலசி அரைத்துக் கொள்ளவும்.இதை தீக்காய புண்கள் மீது அப்ளை செய்தால் எரிச்சல் குறையும்.

படி 03:

பிறகு மருந்து கடைகளில் விற்கும் ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட் வாங்கி தீக்காயங்கள் மீது அப்ளை செய்யவும்.தொடர்ந்து ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட் தடவி வந்தால் தீக்காய புண்கள் விரைவில் ஆறிவிடும்.

தீக்காயம் பட்ட இடத்தில் கொத கொதவென்று இருந்தால் புண்கள் ஆறாது.இதனால் தீக்காய புண்கள் உள்ள இடத்தில் தண்ணீர் படமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.சிலர் தீக்காய தோல்களை நீக்க முயற்சிப்பார்கள்.இது முற்றிலும் தவறான பழக்கம்.தீக்காயம் ஆன தோலை நீக்கினால் இரத்தம்,எரிச்சல் ஏற்படுவதோடு புண்கள் ஆற நெடு நாள் எடுத்துக் கொள்ளும்.