கருகி போன உங்கள் சமையல் பாத்திரத்தை பளபளப்பாக மாற்றும் மேஜிக் பொடி பற்றி தெரியுமா?
சமையலறையில் சமைக்கும் பொழுது அதிக கவனமாக இருக்க வேண்டும்.கொஞ்சம் கவனம் சிதறினாலும் சமையலும் வீணாகி விடும்.பாத்திரமும் வீணாகி விடும்.
பாத்திரம் கருகி போய்விட்டால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது சிரமான ஒன்று.இதனால் அந்த பாத்திரத்தை தூக்கி எறியும் நிலை ஏற்பட்டு விடும்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை ட்ரை செய்தால் கருகிய பாத்திரம் நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)சமையல் சோடா
2)வினிகர்
3)தூள் உப்பு
4)எலுமிச்சை தோல்
5)சோப் தூள்
செய்முறை:-
இரண்டு எலுமிச்சம் தோலை வெயிலில் காயவைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணம் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா,ஒரு தேக்கரண்டி தூள் உப்பு,ஒரு தேக்கரண்டி சோப் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
இந்த பொடியில் 3 தேக்கரண்டி வினிகர் ஊற்றி கலக்கினால் கருகிய பாத்திரங்களை பளபளப்பாகும் கலவை தயார்.
முதலில் கருகிய பாத்திரத்திற்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.பிறகு அதில் தயாரித்த கலவையை ஊற்றி மேலும் 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு ஸ்க்ரப்பர் பயன்படுத்தி தேய்த்தால் கருகிய பாத்திரம் பழைய நிலைக்கு வந்து விடும்.அதிக செலவு இல்லாத இந்த யுக்தியை முயற்சிபதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.