இது தெரியுமா? தேங்காய் சாப்பிட்டால் உடலில் பேட் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

Photo of author

By Divya

இது தெரியுமா? தேங்காய் சாப்பிட்டால் உடலில் பேட் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

Divya

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருள் தான் தேங்காய்.இந்த தேங்காயில் இருந்து கிடைக்க கூடிய எண்ணெய்,பால் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மற்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.சிலர் பச்சை தேங்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர்.அது உண்மையா இல்லையா என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தேங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

1)புரதம் 2)வைட்டமின் சி 3)வைட்டமின் பி 4)தாதுக்கள் 5)நார்ச்சத்துக்கள் 6)ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

தேங்காய் நன்மைகள்:

**தினமும் தேங்காய் அல்லது தேங்காய் பால் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தேங்காய் பால் கொடுக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் பருகி வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

**தேங்காய் பால் பருகுவதால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.தேங்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

**இரவு நேரத்தில் தேங்காய் பால் பருகினால் நன்றாக தூக்கம் வரும்.முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தேங்காய் பால் பருகலாம்.

**முடி ஆரோக்கியம் மேம்பட தேங்காய் பால் செய்து பருகலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தேங்காய் பால் கட்டுப்படுத்துகிறது.

**அல்சர் புண்கள் மற்றும் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய தேங்காய் பால் செய்து பருகலாம்.

**தேங்காயை பச்சையாக சாப்பிட்டால் சருமம் மிருதுவாக இருக்கும்.தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.உடல் உஷ்ணத்தை குறைக்க தேங்காய் பால் பருகலாம்.

இத்தனை நன்மைகளை கொண்டிருக்கும் தேங்காயை உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.ஆனால் தேங்காய் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்காது என்பது தான் உண்மை.பச்சை தேங்காய் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.