இங்கு கோழிக்கறி விரும்பிகள் அதிகமாக இருகின்றனர்.மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் கோழியில் செய்யப்படும் வறுவல்,கிரேவி,குழம்பு,சுக்கா,பிரட்டல்,சில்லி போன்ற உணவுகள் கோழி இறைச்சி சாப்பிடாதவர்களை கூட தன் பக்கம் இழுத்துவிடும்.
நாட்டு கோழி விலை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் பிராய்லர் மற்றும் கிராஸ் கோழி இறைச்சிகளை உட்கொள்கின்றனர்.கோழி இறைச்சியில் புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இன்று வாரம் ஒருமுறையாவது கோழி இறைச்சி உட்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கின்றனர்.
சிலருக்கு தினமும் கோழி இறைச்சி உட்கொள்ளும் பழக்கம் இருக்கும்.அந்த அளவிற்கு கோழி இறைச்சி சுவைக்கு அடிமையாகி இருக்கின்றனர் நம் மக்கள்.கோழி உணவின் மூலம் சில ஆரோக்கி
நன்மைகளும் கிடைக்கிறது.
இருப்பினும் நாம் கோழக்கறி சாப்பிடும் பொழுது சில வகை உணவுகளை சேர்த்துக் கொள்வதை
தவிர்க்க வேண்டும்.அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து அசைவப் பிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
முதலில் கோழி இறைச்சி உட்கொள்வதற்கு முன்னர் அல்லது உட்கொண்ட உடனே பால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.கோழிக்கறி சாப்பிடும் பொழுது பால் எடுத்துக் கொண்டால் சருமம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.அதாவது சொறி,சிரங்கு,அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கோழி மற்றும் மீன் இரண்டும் அசைவ உணவு என்றாலும் இவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகிவிடும்.இரண்டுமே வெவ்வேறு வகையான புரதங்கள் இருப்பதால் இவற்றை ஒன்றாக உட்கொள்ளும் பொழுது உடல் உபாதைகள் அதிகமாக ஏற்படக் கூடும்.
கோழி இறைச்சியை சமைக்கும் பொழுது சிலர் தயிர் சேர்க்கின்றனர்.அதாவது பிரியாணி,கிரேவி,சில்லி செய்ய உள்ள சிக்கனில் தயிர் சேர்த்தால் சுவையாக இருக்கும் என்று அதை பயன்படுத்துகின்றனர்.சிலர் சிக்கன் பிரியாணியுடன் தயிர் பச்சடி சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.ஆனால் கோழிக்கறி உணவுகளுடன் தயிர் சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் செரிமானப் பிரச்சனை,தோல் பிரச்சனை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.அதேபோல் கோழிக்கறி உணவு உட்கொண்ட பிறகு தேன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இது உடலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடும்.