இது தெரியுமா? இந்த அரிசியை சாப்பிட்டால்.. ஆறாத அல்சர் புண்களும் ஆறிவிடும்!!

Photo of author

By Divya

இது தெரியுமா? இந்த அரிசியை சாப்பிட்டால்.. ஆறாத அல்சர் புண்களும் ஆறிவிடும்!!

Divya

வயிற்றில் அல்சர் புண்கள் இருந்தால் எப்பொழுதும் வயிறு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.இந்த அல்சர் புண்கள் குணமாக மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடித்து அல்சர் புண்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.

பார்லி அரிசி உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு அல்சர் புண்களை குணப்படுத்த உதவுகிறது.இந்த பார்லியில் எப்படி கஞ்சி செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி
2)தேன்
3)பசும் பால்

பயன்படுத்தும் முறை:-

முதலில் இரண்டு தேக்கரண்டி பார்லி அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் அரைத்த பார்லி அரிசி பொடியை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.பாலில் பார்லி அரிசி நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த பார்லி கஞ்சியில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டால் அல்சர் புண்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி
2)பூண்டு
3)மிளகு
4)உப்பு

செய்முறை விளக்கம்:-

25 கிராம் பார்லி அரிசியை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை பொடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு பல் பூண்டு மற்றும் ஐந்து கிராம் மிளகை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பார்லி கஞ்சி நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த கஞ்சியை குடித்தால் அல்சர் புண்கள் ஆறும்.