வெயில் காலம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது மாம்பழங்கள்தான்.அதிக தித்திப்பு சுவையுடன் ஊரை கூட்டும் வாசனையை கொண்டிருக்கும் மாம்பழத்தை ருசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மாம்பழத்தில் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு,குண்டு மங்கா,பங்கனப்பள்ளி என்று நூற்றுக்கணக்கான வெரைட்டி இருக்கிறது.
இதில் பெரும்பாலும் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.மாம்பழம் சுவையாக இருந்தாலும் பச்சை மாங்காயில் கிடைக்கும் சத்து அதில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.பச்சை மாங்காய் புளிப்பாக இருப்பதால் அவற்றில் உப்பு,மிளகாய் தூவி சாப்பிடுகின்றனர்.இந்த பச்சை மாங்காய் சுவை குறைவாக இருந்தாலும் அவற்றின் ஆரோக்கிய பலன்கள் தெரிந்தால் இனி ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவீங்க.
பச்சை மாங்காய் கொடுக்கும் ஆரோக்கிய பலன்கள்:
*உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாங்காய் சாப்பிடலாம்.பச்சை மாங்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
*உடல் எடையை குறைக்க பச்சை மாங்காய் உட்கொள்ளலாம்.கல்லீரலில் இருக்கின்ற கொழுப்பு கரைய பச்சை மாங்காய் ஜூஸ் பருகலாம்.
*கோடை காலத்தில் வியர்க்குரு பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர்.இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க பச்சை மாங்காய் சாறு பருகலாம்.
*பச்சை மாங்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த காயை இடித்து உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பச்சை மாங்காய் சாப்பிடலாம்.பல் ஆரோக்கியம் மேம்பட சீசனில் பச்சை மாங்காய் வாங்கி சாப்பிடுங்கள்.கர்ப்பிணிகள் பச்சை மாங்காய் சாப்பிட்டால் குமட்டல்.வாந்தி வராமல் இருக்கும்.
*ஈறுகளில் இரத்த கசிவு பிரச்சனை இருந்தால் பச்சை மாங்காய் ஜூஸ் செய்து குடித்து பலன் காணலாம்.
*ஆனால் பச்சை மாங்காய் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
*அசிடிட்டி,அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது.வயிற்றுப்புண்,வயிறு எரிச்சல் இருப்பவர்கள் பச்சை மாங்காய் அதிகமாக சாப்பிடக் கூடாது.