கருப்பு கவுனியை விட அதிக சத்துக்கள் நிறைந்த பச்சை நிற அரிசி பற்றி தெரியுமா? போருக்கு செல்வதற்கு முன் படைவீர்கள் இந்த அரசி தான் சாப்பிடுவார்களாம்!

Photo of author

By Divya

கருப்பு கவுனியை விட அதிக சத்துக்கள் நிறைந்த பச்சை நிற அரிசி பற்றி தெரியுமா? போருக்கு செல்வதற்கு முன் படைவீர்கள் இந்த அரசி தான் சாப்பிடுவார்களாம்!

இந்தியாவில் புழுங்கல்,பாசுமதி,பச்சரிசி,கருப்பு கவுனி என்று பல வகை அரிசிகள் விளைவித்து பயனப்டுத்தப்பட்டு வருகிறது.இந்த அரிசி வகைகளில் அதிக சத்துக்கள் கொண்டவை கருப்பு கவுனி.இவை பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

ஆனால் கருப்பு கவுனியை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட அரிசி இருக்கிறது என்ற தகவல் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.அவை தான் மூங்கில் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய முலயாரி.இந்த அரிசி பச்சை நிறத்தில் கோதுமை சுவையில் இருக்கும்.

இதை நன்கு உலர்த்திய பின்னரே அரிசியாக பயன்படுத்த முடியும்.இந்த அரிசியை முதிர்ச்சியடைந்த மூங்கில் மரத்தில் மட்டுமே காண முடியும்.இதன் காரணமாகவே மூங்கில் அரிசிக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கிறது.

மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து,புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஆஸ்துமா,உயர் இரத்த அழுத்தம்,மாதவிடாய் கோளாறு,நீரிழவு நோய்,குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாகும்.

மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து குடித்து வந்தாலே உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)மூங்கில் அரிசி – 50 கிராம்
2)வெண்ணெய் – 1 தேக்கரண்டி
3)பூண்டு – 2 பல்
4)கேரட் – 1
5)பீன்ஸ் – 2
6)பச்சை பட்டாணி – 1 பாக்கெட்
7)வெங்காயம் – 1
8)மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
9)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 கிராம் மூங்கில் அரிசி மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.அதன் பிறகு நறுக்கிய பூண்டு,கேரட்,பீன்ஸ்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் பச்சை பட்டாணி,மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

அதன் பின்னர் வேக வைத்த அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த கஞ்சியை வாரம் இருமுறை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.