நம் வீட்டு கிட்சனில் உள்ள இந்த ஒரு பொருள்.. PCOS-ஐ சமாளிக்கும் என்பது தெரியுமா?

Photo of author

By Divya

நவீன காலத்தில் பெண்கள் PCOS என்று அழைக்கப்படும் பாலிசிடிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற பிரச்சனைக்கு ஆளாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த PCOS பிரச்சனை கருவுறுதலில் பிரச்சனை,மலட்டுத் தன்மை போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

இந்த PCOS பிரச்சனைக்கு என்று எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது என்றாலும் நம் பழங்கால வைத்திய முறையை கொண்டு எளிமையான முறையில் தீர்வு காணலாம்.இந்த PCOS பிரச்சனை வர முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றம் தான்.

இந்த PCOS பிரச்சனைக்கு தீர்வு காண பாதாம் பிசினை மருந்தாக பயன்படுத்தலாம்.பாதாம் மரத்தில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள் தான் பாதாம் பிசின்.இது மருத்துவ குணம் கொண்ட குளுமை நிறைந்த பொருளாகும்.

PCOS பிரச்சனையின் அறிகுறிகள்:

1)நெஞ்செரிச்சல்
2)அசிடிட்டி
3)மலச்சிக்கல்
4)மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான வலி
5)அதிக உடல் வெப்பநிலை
6)முகப்பரு

PCOSக்கு மருந்தாகும் பாதாம் பிசினை பயன்படுத்தும் முறை:

*பாதாம் பிசின்
*தேன்
*கெட்டியான பால்

முதலில் பாதாம் பிசினை வாணலியில் போட்டு லேசாக வறுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கெட்டியான பால் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பால் ஒரு கொதி வந்ததும் தண்ணீரில் ஊறவைத்துள்ள பாதாம் பிசினை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த பாலை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சுவைக்காக தேன் சேர்த்து பருக வேண்டும்.இந்த பாதாம் பிசின் பால் பெண்களின் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக திகழ்கிறது.PCOS பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து பெண்களும் இந்த பாதாம் பிசின் பாலை பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் வெந்தயத்தை ஊறவைத்து மூளைக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முளைக்கட்டிய வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தாலும் PCOS பிரச்சனை சரியாகும்