நாம் உணவு சாப்பிட்டால்தான் உயிர் வாழ முடியும்.உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக உணவு திகழ்கிறது.நீண்ட ஆயுளுடன் வாழ ஆரோக்கிய உணவு அவசியமாகும்.தண்ணீருக்கு அடுத்து நாம் உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை விஷயமாக இருப்பது உணவுதான்.
இப்படி உயிர் வாழ அவசியமானவையாக திகழும் உணவு தான் தற்பொழுது விஷமாக மாறி வருகிறது.தற்பொழுது நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் உடல் நலத்திற்கு கேடு தரக் கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிட்டு கொண்டிருப்பது உணவு அல்ல.அது உயிரை பறிக்கும் ஸ்லோ பாய்சன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காரசாரமான பொரித்த அசைவ உணவுகள்,பதப்படுத்தி சமைக்கும் உணவுகள்,மீண்டும் சூடுபடுத்தப்படும் உணவுகளை தான் மக்கள் விரும்புகின்றனர்.தற்பொழுது உள்ள உணவுகளில் வேறும் ருசி மட்டும் இருக்கின்றது.ஆரோக்கியத்தை அதில் பார்க்க முடிவதில்லை.
ஜங்க் புட்,பாஸ்ட் புட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆயுட்காலம் வேகமாக குறைகிறது.சிலவகை ஆரோக்கிய உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை விஷமாகிவிடுகிறது.அப்படி எந்தெந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1)கோழி
புரதச்சத்துக்கு பெயர் போன கோழி இறைச்சி உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் புட் பாய்சனாகிவிடும்.
2)கீரை
போலிக் அமிலம்,இரும்பு போன்ற உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை கொண்டிருக்கும் கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு போன்றவை ஏற்படும்.
3)உருளைக்கிழங்கு
மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுப் பட்டியலில் உருளைக்கிழங்கும் உள்ளது.இந்த உணவை சூடுபடுத்தி சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகிவிடும்.
4)முட்டை
ஆரோக்கியம் நிறைந்த முட்டையில் செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும்.
5)அரிசி உணவு
நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் அரிசி உணவை சூடுபடுத்தினால் நச்சுத் தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.
6)பிரியாணி
சிலர் பிரியாணி உணவை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.இப்படி சாப்பிட்டால் அவை ஸ்லோ பாய்சனாக மாறிவிடும்.
7)காளான்
ருசி நிறைந்த காளானில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.காளானில் செய்யப்படும் உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு ஏற்படும்.
8)மீன்
ஒமேகா 3 கொழுப்பு,புரதம் போன்றவை நிறைந்த மீன் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் நச்சுத் தன்மை அதிகமாகிவிடும்.