நாம் தற்பொழுது பல்வேறு மருத்துவத்தை பின்பற்றி வருகின்றோம்.சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,அலோபதி,ஹோமியோபதி போன்ற வரிசையில் இயற்கை மருத்துவம் அதாவது நேச்சுரோபதியும் அடங்கும்.
இந்த இயற்கை மருத்துவத்தில் மருந்து,ஊசி,மாத்திரை எதுவும் இல்லாமல் வியாதிகளை குணப்படுத்துகின்றனர்.உடலில் இருக்கின்ற ஐந்து உறுப்புகளை வைத்து உடல் சமநிலையை சரி செய்கின்றனர்.
உடலில் நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்.இயற்கை மருத்துவத்தின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை இணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.மனம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.
எந்த ஒரு நோய் பாதிப்பையும் இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும்.நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இயற்கை மருத்துவம் உதவுகிறது.நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயற்கை மருத்துவத்தை பின்பற்றலாம்.
தற்பொழுது கொஞ்சம் தலைவலி வந்தாலே உடனே மாத்திரை வாங்கி போடும் மோசமான வழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.மருந்து,மாத்திரைகள் நம் உடல் நோய்களை குணப்படுத்தும் என்றாலும் இதை மட்டுமே நம்பி இருந்தால் நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு பரிசோதனை,சிகிச்சை போன்றவை வழங்கப்படுகிறது.ஆனால் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை இன்றி ஆரோக்கிய உணவுகள் மூலம் குணமடைய செய்கின்றனர்.
அதேபோல் நமது நாடியை வைத்து நமது உடலில் என்ன சுவை குறைவாக இருக்கிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ற இயற்கை சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.ஊசி,மருந்து,மாத்திரை இது எதுவும் இல்லாமல் நீங்கள் நோய்களை குணப்படுத்திக் கொள்ள நினைத்தால் நிச்சயம் நீங்கள் நேச்சுரோபதியை பின்பற்றலாம்.