உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் தலைசுற்றல்,மயக்கம்,குமட்டல் உணர்வு ஏற்படும்.எனவே இந்த பித்தத்தை கட்டுக்குள் வைக்க கீழ்கண்ட ஹோம் ரெமிடியை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
**ஆவாரம் பூ – கால் கப்
**தண்ணீர் – ஒரு கப்
**பனைவெல்லம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1)முதலில் ஆவாரம் பூவை கால் கைப்பிடி அளவு பறித்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2)பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
3)அதன் பிறகு இந்த ஆவாரம் பூவை ஒரு டீ பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
4)தண்ணீர் மஞ்சள் நிறத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த ஆவாரம் பூ நீரில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் முறியும்.
5)ஆவாரம் பூ கஷாயத்தில் பித்தத்தை முறியடிக்கும் என்பதால் அதை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
6)ஆவாரம் பூவில் தேநீர்,ஆவாரம் பூ கூட்டு,ஆவாரம் பூ தோசை செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் சமநிலையில் இருக்கும்.
பித்தத்தை முறிக்கும் மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:
*இஞ்சி – ஒரு துண்டு
*தேன் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1)முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2)பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு தூய்மையான தேனை ஊற்ற வேண்டும்.
3)பின்னர் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை அதில் போட்டு கலந்துவிட வேண்டும்.இஞ்சி துண்டுகள் தேனில் ஊறி வந்ததும் அதை சாப்பிட வேண்டும்.
4)இவ்வாறு தேனில் இஞ்சி ஊறவைத்து நாற்பத்து எட்டு தினங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற பித்தம் முறிந்துவிடும்.
5)அதேபோல் இஞ்சி சாறுடன்,வெங்காயச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டு வந்தாலும் பித்தம் முறியும்.புளிப்பு நிறைந்த உணவுகள் பித்தத்தை முறிக்கும்.எனவே அடிக்கடி புளிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
6)ரோஜா பூவை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தால் உடல் பித்தம் மாயமாகிவிடும்.சுக்கு,மிளகு,திப்பிலி போன்ற பொருட்களை கொண்டு கஷாயம் செய்து பருகி வந்தால் பித்தம் முறியும்.