உலகின் உடைய மிக கஷ்டமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை மிகவும் பயத்தோடு அணுகுகின்றனர். இப்படி பயத்தோடு அணுகக் கூடிய தேர்வில் பலர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மற்ற மருத்துவ பிரிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
நீட் தேர்வு இல்லாமல் சேரக்கூடிய மருத்துவ படிப்புகள் :-
✓ நர்சிங்
✓ பார்மசி
✓ பிசியோதெரபி
✓ உளவியல்
✓ தொழில் சிகிச்சை இளங்கலை
✓ கால்நடை அறிவியல் படிப்பு
✓ உயிரி தொழில்நுட்பத்தில் பிஎஸ்சி
✓ பிஎஸ்சி நுண்ணுயிரியல்
✓ உயிரி மருத்துவப் பொறியாளர்
✓ பிஎஸ்சி மரபியல்
✓ மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையில் இளங்கலை பட்டம்
✓ ஊட்டச்சத்து நிபுணர்
✓ சுவாச சிகிச்சை ஆளர்
✓ பெர்ப்யூஷனிஸ்ட்
✓ இருதய தொழில்நுட்ப வல்லுனர்
✓ மேம்பட்ட பராமரிப்பு துணை மருத்துவர்
✓ மயக்க மருந்து உதவியாளர்
✓ உடற்கூறியியல்
✓ உதவி நடத்தை ஆய்வாளர்
✓ தீக்காய பராமரிப்பு தொழில்நுட்பவியல்
✓ தீவிர சிகிச்சை அல்லது தீவிர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர்
✓ மருத்துவ சமூக சேவகர்
✓ மருத்துவக் குறியீட்டாளர்
✓ செல் மரபியல் நிபுணர்
✓ நோய் கண்டறிதல் மருத்துவ கதிரியக்கவியலாளர்
✓ நோய் கண்டறிதல் மருத்துவ ஒலிப்பதிவாளர்
✓ டயாலிசிஸ் சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்
✓ சூழலியலாளர்
✓ இயக்க சிகிச்சையாளர்
✓ மூலக்கூறு உயிரியல் ஆளர்
✓ மருத்துவ சாதன தொழில்நுட்ப வல்லுனர்
✓ மருத்துவ பதிவு தொழில்நுட்ப வல்லுனர்
✓ சுகாதார கல்வியாளர்/ பாலூட்டுதல் ஆலோசகர்
✓ தடைய அறிவியல் தொழில்நுட்பவியலாளர்
✓ எண்டோஸ்கோபி & லேப்ராஸ்கோபி தொழில்நுட்பவியலாளர்
✓ அவசர மருத்துவர் தொழில்நுட்பவியலாளர்
✓ உடலியல்
✓ எலும்பியல் பிசியோதெரபிஸ்ட்
✓ தூக்க ஆய்வக தொழில்நுட்பவியலாளர்
✓ கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்
✓ அணு மருத்துவ தொழில் நுட்பவியலாளர்
✓ அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்பவியலாளர்
✓ கண் மருத்துவர்
✓ மருத்துவர் உதவியாளர்
நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க முடியும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கூட இது சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து பயிலலாம். இந்த படிப்புகளில் சேர்வதற்கான தகுதிகளாக வரையறுக்கப்பட்டவை பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அதிலும் குறிப்பாக வேதியல் இயற்பியல் மற்றும் உயிரியல் கணிதம் பாடங்களில் குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை எடுத்தால் இதுபோன்ற மருத்துவ பிரிவுகளில் சேர முடியும்.