தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 

Photo of author

By Amutha

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 

தோழியின் கணவனை திருடி கல்யாணம் செய்து கொண்டதாக பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி ட்ரோல் செய்யப்பட்டார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது பிசினஸ் பார்ட்னரும் நீண்ட கால நண்பருமான சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி இன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சி ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு தயாராகி வருவதையும், அவரது திருமணத்தின் போது எழுப்பப்பட்ட சில எதிர்மறையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் ஆராய்ச்சி செய்கிறது.

ஹன்சிகா தனது நெருங்கிய தோழியின் கணவரை திருடி விட்டதாக ட்ரோல் செய்யப்பட்டார்.

சோஹைல் உடன் அவர் நிச்சயதார்த்தத்தை அறிவித்த உடனேயே ஹன்சிகாவின் தோழியான ரிங்கியுடன் சோஹைலின் முதல் திருமணம் பற்றி பலர் பதிவிட தொடங்கினர். தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட ஹன்சிகா அவரின் கணவரை திருடிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டார். கடுமையாக கேலி செய்யப்பட்டார்.

இந்த திருமண வீடியோவில் ஹன்சிகா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து தன்னையும் சோஹைல் பற்றிய கதைகளையும் விமர்சிக்கிறார்.

அந்த வீடியோவில் ஹன்சிகா கூறும் போது, அந்த நேரத்தில் நான் இந்த நபரை சந்தித்தது என் தவறு அல்ல. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு பொது நபராக, மக்கள் விரல்களை சுட்டிக்காட்டுவது மற்றும் மக்களை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது.” நான் விலை கொடுக்கிறேன் என கூறினார். 

இது பற்றி சோஹைல் கூறும்போது, எனக்கு முன்பே திருமணமானது மற்றும் பிரிந்ததற்கு ஹன்சிகா தான் காரணம் என்று கூறுவது எதுவும் ஆதாரம் அற்றது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் எனக்கு 2014இல் திருமணம் நடைபெற்றது. ஆனால் அதன் காலம் மிகவும் குறுகியது அப்போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று  அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.