VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

0
675
#image_title

VK இராமசாமி பற்றி தெரியாதவர் இருக்க முடியாது. இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு வேண்டும் என்றால் அவரைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை போல் ஒரு நல்ல கலைஞனை யாராலும் பார்க்க முடியாது. எம்ஜிஆர் முதல் சிவாஜி முதல் ரஜினி கமல் வரை அவர் அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கின்றார்.

 

அவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றிலும் மக்களுக்கு சிரிப்பை தரக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. அவரைப் போல ஒரு குண சித்திர நடிகரும் கிடையாது. அவரைப் போல் மாடுலேஷனில் பேசுபவர்கள் இருக்கவே முடியாது , என்று சொல்லும் அளவிற்கு அவர் மிகச் சிறந்த நடிகராக இருந்தார்.

 

நாடகத்திலேயே தனது ஆர்வத்தை கொண்டிருந்த VK ராமசாமி திரையுலகருக்கு நாம் இருவர் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

 

தனது சுயசரிதையை “எனது கலைப்பயணம் ” என்ற புத்தகத்தின் மூலம் எழுதி வெளியிட்டவர் இவர். இவர் இந்த புத்தகத்தில் தான் கடந்து வந்த முட்களான பாதைகளை பற்றி விவரித்துள்ளார்.

 

நாடகத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன? எப்படி திரையுலகுக்கு வந்தார்? என்ற அனைத்து விஷயங்களையும் இதில் தெரிவித்துள்ளார். இந்த நாடகத்தில் இந்த மாதிரியான விஷயங்களும் உள்ளதா? நாடக கலைஞர்களைப் பற்றி இந்த புத்தகம் தீர்வாகவே விவரிக்கின்றது.

 

நாடகக் கலைஞர்களின் நிலை என்ன? நாடகக் கலைஞர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள்? வருமானம் இன்றி தவித்தார்கள்? வருமானம் வருவதற்கு என்னென்ன செய்தார்கள்? என்று அனைத்தையும் அந்த நூலில் சொல்லியுள்ளார்.

 

முதலில் நாம் இருவர் நாடகமாகவே இருந்தது . நாடகத்தைப் பார்த்துதான் படம் ஆக்க வேண்டும் என்று நினைத்தார் AVM. அந்த நாடகத்தில் 60 வயது வேடம் தரித்த 19 வயது VK ராமசாமி நடித்திருந்தாராம். இதை AV மெய்யப்ப செட்டியார் நம்பவே இல்லையாம். இவர்தான் நடித்தார் என்று இவர் மறுபடியும் சொல்லிக் காட்டவே நம்பினாராம் AVM. அதனால் இவரையே நாம் இருவர் படத்தில் நடிக்க வைக்கலாம் என்று AVM-ம் விரும்பினார்.

 

நாடக கலைஞர்கள் எல்லாம் நாமும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது, வி கே ஆருடன் மூன்று நாடக கலைஞர்கள் மட்டும் நடித்தார்களாம். மற்றவர்களுக்கு சோகமே மிஞ்சியது என்ற ஒரு நிகழ்வை கூட அவ்வளவு அழகாக அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

 

இந்த புத்தகத்தை படித்தார்கள் என்றால் இவரா இந்த புத்தகத்தை எழுதினார் என்ற எண்ணமே நமக்கு வரும். அவ்வளவு அழகாக தன் வாழ்க்கையில் எப்படி நடந்தது என்று சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.

 

 

author avatar
Kowsalya