நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்!
இன்சோமினியா என்னும் தூக்கமின்மையால் இன்றைய இளைஞர்கள் பலர் பெரும் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் நைட் சிப்ட், பகல் நேர வேலை என மாறி மாறி வருவதால் உடல் முறையற்ற செயல்படுவதால் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்துவதால் தூக்கமின்மை குறையும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை.
அஸ்வகந்தா:
ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளில் ஒன்று அஸ்வகந்தா. ட்ரைதலிக் கிளைக்கோல் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி,தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்கிறது.
அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து தினமும் தூங்கச் செல்லும்முன் குடிக்க வேண்டும்.
கெமோமில் டீ:
தூக்கமின்மையைப் பிரச்சினையை சரிசெய்ய கெமோமில் மிகச்சிறந்து. இந்த டீக்கு கெமோமில் பிளேவரை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து விட்டு குளிக்க வேண்டும்.
பாதாம்:
பாதாமில் நல்ல கொழுப்புச் சத்தும் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி மக்னீசியம் தசைகளை அமைதிப்படுத்தி தூக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் இரவில் சிறிது பாதாம் அல்லது பாலில் பொடியாகக் கலந்தும் குடிக்கலாம்.
பூசணிக்காய் விதை:
பூசணிக்காய் விதையில் பெப்பிடோஸ், ட்ரைப்டோஃபன் போன்ற மூலக்கூறுகள் அதிக அளவில் இருக்கின்றன. அதோடு இவற்றிலுள்ள ஜிங்க் சத்து செடரோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
ஜாதிக்காய்:
ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
ஜாதிக்காயில் உள்ள அமினோ அமிலங்களும் செரடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றின் காரணமாக தூக்கமின்மை பிரச்சினை குறைந்து நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.