ஜோ ரூட்டுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லையா?

0
190
இங்கிலாந்தின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் வீரர் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடும் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜோ ரூட்டுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இனிமேல் இங்கிலாந்து டி20 அணியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஒயிட்-பால் அணி கேப்டன் மோர்கன் பேசும்போது அவருக்கான எதிர்காலம் நிச்சயம் உள்ளது.
தற்போதைய நிலையில் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடமில்லை என்ற பேச்சு நடைபெற்று கொண்டிருந்தது. நாங்கள் அவரை எல்லாவித கிரிக்கெட் போட்டிக்கும் விளையாட அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஜோ ரூட் டி20 போட்டியில் விளையாட விரும்புகிறார். அவருக்கு கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. தற்போது இந்த இடைவெளி அவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும்  என நாங்கள் உணர்கிறோம்’’ என்றார்.
Previous articleசுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகல்
Next articleதன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here