கொரோனா காலத்தில் உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவில்லை ? ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதில்

Photo of author

By Vijay

கொரோனா காலத்தில் உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவில்லை ? ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதில்

கடந்த 2020 ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கு அறைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய நிறுவனங்களுக்கு பில் தொகை இன்னும் வழங்காமல் உள்ளது என பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் , உறுப்பினர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டது போல் யாருக்கும் பில் தொகை வழங்காமல் நிலுவையில் இல்லை, மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர பணியாளர்கள் ஆகியோருக்கு நல்ல தரமான உணவுகள் மற்றும் அறைகளை நல்ல முறையில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் வழங்கிய உண்மையான நிறுவனங்களுக்கு பைசா பாக்கி இல்லாமல் பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

போலியான பெயரில் ஹோட்டல் இருப்பதாக கணக்கு காட்டி உணவுகளை வழங்கியதாக கூறி பில் தொகை நிலுவையில் உள்ளதாகவும், இருப்பினும் அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையாகவே தரமான உணவுகள் வழங்கப்பட்டதா என ஆய்வு நடத்தி, அது உண்மை எனும் பட்சத்தில் நிலுவை தொகை உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.

அமைச்சரின் பதிலை கேட்ட பன்னீர்செல்வம், அமைச்சர் கூறுவது போல் ஆய்வு பணிகளை விரைவில் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக செட்டில் மென்ட் தொகையினை வழங்கிட வேண்டும் என கேட்டு கொள்வதாக பேசினார்.