இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாக இருக்கின்றது.இந்த அல்சர் வயிற்றுப்புண்,குடல் புண்,இரைப்புண் புண் என்று பலவகையாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனை இருந்தால் உணவு உட்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
அல்சர் பாதிப்பு இருபவர்களுக்கு வயிறு வலி கடுமையாக இருக்கும்.மலம் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.வயிற்றில் புண் இருந்தால் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அல்சர் உடல் எடையை குறைத்துவிடும்.சிலருக்கு குமட்டல்,வாந்தி பிரச்சனை ஏற்படும்.
உணவில் அதிக காரம் சேர்த்து சாப்பிடுதல்,புளித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல்,தாமதமான உணவுப் பழக்க வழக்கம்,துரித உணவுகளால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது.அல்சர் பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும்.வயிறு எரிச்சல்,நெஞ்சு பகுதியில் எரிச்சல் ஏற்படுதல் போன்றவை அல்சருக்கான முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் உணவின் மூலமே அதற்கு தீர்வு காண வேண்டும்.தயிர் அல்சருக்கு நல்லது என்றாலும் புளிப்பான தயிரை உட்கொண்டால் அல்சர் பாதிப்பு அதிகமாகிவிடும்.
குளிர்ச்சி நிறைந்த உணவுகள் அல்சர் பாதிப்பை குறைக்கும் என்பதால் சிலர் பிரிட்ஜில் வைக்கப்பட்ட பானங்கள்,தண்ணீர் போன்றவற்றை பருகுகின்றனர்.ஆனால் பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் அல்சர் பாதிப்பு தீவிரமாகிவிடும்.
**பதப்படுத்தப்பட்ட உணவுகள்,எண்ணெய் உணவுகள் அல்சர் பாதிப்பை அதிகரிக்கும்.சின்ன வெங்காயம்,வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகமாக உட்கொண்டால் அல்சர் பாதிப்பு அதிகரிக்கும்.
**பால் பொருட்களை உட்கொண்டால் அல்சர் பாதிப்பு அதிகரித்துவிடும்.சமைத்த உணவுகளை ப்ரீஹீட் செய்து உண்பதை தவிர்க்க வேண்டும்.
**இறைச்சி,சூடான பானங்கள் அல்சர் பாதிப்பை அதிகமாக்கிவிடும்.காபின் உணவுகளை தவிர்க்க வேண்டும்.