நமது உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த பல வகை உணவுகள் இருக்கின்றது.இஞ்சி,பூண்டு,சிட்ரஸ் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.அதேபோல் மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது.
எலுமிச்சம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.சிட்ரஸ் பழமான எலுமிச்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.மிளகு கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால் தொண்டை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.
பூண்டு பற்களை இடித்து கொதிக்க வைத்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.மஞ்சள் கலந்த நீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.தூதுவளை இலையை கொண்டு சூப் மற்றும் ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.
தினமும் ஒரு கிளாஸ் மோர் குடித்தால் ஜீரண சக்தி மேம்படும்.சிவப்பு நிற உணவுப் பொருட்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆப்பிள்,செவ்வாழை போன்றவை இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
மணத்தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.மணத்தக்காளி காயை உலர்த்தி பொடித்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.கசப்பு உணவுகளான பாகற்காய்,கோவைக்காய் ஆகியவற்றை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தூதுவளை இலையை கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.பெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அதிகளவு கீரை உணவுகளை சாப்பிட்டால் உடலில் போலிக் ஆசிட் அளவு அதிகரிக்கும்.