நாம் உட்கொள்ளும் இறைச்சியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக மீன் உள்ளது.கோழி,ஆடு போன்ற இறைச்சி கூட ஓர் அளவிற்கு தான் உட்கொள்ள முடியும்.ஆனால் மீன் உணவு எள்ளளவு சாப்பிட்டாலும் தெகட்டாது.அந்த அளவிற்கு மீன் சுவை நம் நாக்கில் ஓட்டிகிடக்கிறது.
மீன் ப்ரை,மீன் குழம்பு,மீன் வறுவல்,மீன் புட்டு என்று வகை வகையான உணவு செய்து சாப்பிடுவது போன்று மீன்களிலும் ஆற்று மீன்,கடல் மீன்,ஏரி மீன்,குளத்து மீன் என வகைகள் உண்டு.
மீனில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்:
1)ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
2)பாஸ்பரஸ்
3)கால்சியம்
4)மெக்னீசியம்
5)அயோடின்
6)புரோட்டின்
7)இரும்பு
8)வைட்டமின்கள்
மீன்களில் நல்ல கொழுப்புச்சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.மீன் சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மீன் உணவு நன்மைகள்:
**இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடல் இரத்தம் உயராமல் தடுக்கிறது.
**உடல் பருமன் பிரச்சனையை தடுக்கிறது.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
**புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
சால்மன்,கெளுத்தி,மத்தி,நெத்திலி போன்ற மீன்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு காணப்படுகிறது.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்பட கூடியவை ஆகும்.
மீன் வகைகள்:
1.வஞ்சிரம் 2.வெளவால் மீன் 3.நெத்திலி மீன் 4.சுறா 5.விரால் 6.ஜிலேபி 7.சூரை 8.பாறை மீன்
9.காலா மீன் 10.திருக்கை 11.கெண்டை 12.கெளுத்தி 13.சால்மன் 14.சீலா மீன் 15.கொடுவா மீன்
16.சங்கரா மீன் 17.கனவா மீன் 18.வாளை மீன் 19.கிளி மீன் 20.பண்ணா மீன்
இது தவிர இன்னும் ஏகப்பட்ட மீன் வகைகள் இருக்கிறது.பொதுவாக மீன் என்று எடுத்துக் கொண்டால் இருவகை தான் உள்ளது.கடல் நீரில் வாழும் மீன் மற்றும் நன்னீரில் வாழும் மீன்.இந்த மீன்களில் எவை அதிக நன்மைகள் கொண்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
நன்னீர் மீன்:
ஆறு,ஏரி,குளம் போன்ற இடத்தில் வாழும் மீன்கள் புழு,பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்ளகிறது.இதில் ஒமேகா 3 அமிலம் என்பது மிகவும் குறைவாக இருக்கும்.கடல் மீன்களை விட இந்த மீன்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவான இருக்கும்.
கடல் மீன்:
கடலில் வாழும் மீன்கள் கடற்பாசிகளை உட்கொண்டு வாழ்கிறது.இந்த பாசியில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பெரிய கடல் மீன்களை விட மத்தி,சங்கரா போன்ற சிறிய வகை மீன்களில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.கடல் மீன்களில் புரதச்சத்தும் அதிகளவில் காணப்படுகிறது.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு கடல் மீன்கள் தீர்வாகிறது.சருமப் பொலிவிற்கு மீன் உணவுகள் சிறந்த தீர்வாக இருக்கிறது.ஆற்று மீனில் உப்பு இருக்காது.ஆனால் கடல் மீனில் சிறிதளவு உப்பு இருக்கிறது.இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.