வகை வகையான தலைவலிகளும்.. அதை குணப்படுத்தும் சரியான வீட்டு வைத்தியமும்!!

Photo of author

By Divya

வகை வகையான தலைவலிகளும்.. அதை குணப்படுத்தும் சரியான வீட்டு வைத்தியமும்!!

Divya

நாம் அடிக்கடி சந்திக்கும் நோய் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.தலையில் வாலித்தால் அதை தலைவலி என்று சொல்கிறோம்.ஆனால் தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.டென்ஷன் ஆவதால் ஏற்படும் தலைவலி,ஒற்றைத் தலைவலி,கிளஸ்டர் தலைவலி,சைன்ஸ் தலைவலி,ஹிப்னிக் போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.

உடல் சோர்வு,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.இதை டென்ஷன் தலைவலி என்று அழைக்கின்றோம்.தலையின் ஒருபுறத்தில் துடித்தல்,வாந்தி,குமட்டல் உணர்வு இருந்தால் அது ஒற்றைத் தலைவலி என்று அர்த்தம்.

நெற்றி பகுதியில் வலி,கண்கள் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல் இருந்தால் அதி கிளஸ்டர் தலைவலி என்று அர்த்தம்.மூக்கு பகுதி மற்றும் நெற்றியை சுற்றி வலி தலைவலித்தால் அது சைன்ஸ் தலைவலி என்று அர்த்தம்.தூங்கி எழுந்த உடன் தலைவலி வந்தால் அது ஹிப்னிக் தலைவலி பாதிப்பு என்று அர்த்தம்.உடலில் நீரிழிப்பு ஏற்பட்டாலும் தலைவலி பாதிப்பு ஏற்படும்.

நெற்றிப்பகுதியில் வலி இருந்து தலைவலித்தால் தேங்காய் எண்ணெயை சூடாக்கி சூடம் சேர்த்து கலந்து பூசினால் வலி குறையும்.தண்ணீரில் கல் உப்பு போட்டு ஆவிபிடித்தால் தலையில் நீர்கோர்த்தல் பிரச்சனை சரியாகும்.

கொத்தமல்லி விதையை கொண்டு டீ போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.புதினா இலையை சூடான தண்ணீரில் போட்டு ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.சுக்கு கொண்டு பிளாக் டீ செய்து குடித்தால் தலைபாரம் குணமாகும்.

தலைவலி குணமாக மூலிகை டீ செய்முறை:

1)சுக்கு
2)கொத்தமல்லி
3)தேயிலை தூள்
4)பட்டை
5)கிராம்பு
6)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி இடித்த கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி தேயிலை தூள்,ஒரு துண்டு இடித்த சுக்கு,ஒரு துண்டு பட்டை,இரண்டு கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குடித்தால் தலைவலி பிரச்சனை குணமாகும்.