செரிமான பிரச்சனை சரியாக! இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!
நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று புரதச்சத்து. இது சைவம் மற்றும் அசைவ உணவுகளில் மிகவும் அதிகமாக உள்ளது. சைவ உணவுகளில் புரதச்சத்தம் அதிகம் உள்ளது. என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.
நம் உடலில் எலும்புகள், தசைகள் ,நரம்புகள் என உறுப்புகளின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது இந்த புரதச்சத்து. இந்த புரதச்சத்தானது. நம் உடலில் புதிய செல்களை உருவாக்குவதற்கும் பழுதுபட்ட செல்களை மேம்படுத்தவும் மிகவும் அவசியமான சத்து புரதச்சத்து.
முளைகட்டிய பயிறு வகைகள் அதாவது முளைகட்டிய பச்சை பயிரில் ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் புரதச்சத்து மட்டுமல்லாமல் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது.இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து செரிமான பிரச்சனையை சீராக்கும். பொதுவாக பால் சார்ந்த உணவுகளில் நல்ல அளவில் புரதச்சத்து இருக்கிறது. பன்னீர் இதில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ளது.
இந்த பன்னீர் சாப்பிடுவதால் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த பன்னீரில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. சோயா பீன்ஸ் இதில் அதிகப்படியான புரதம் இருக்கிறது. கருப்பு உளுந்து இது உடல் எடையை அதிகரிக்கவும் உடலை வலுப்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும். கருப்பு உளுந்தை கஞ்சி செய்தோ அல்லது கலியாகவோ செய்து சாப்பிடலாம். கிட்னி பீன்ஸ் இதில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் உள்ளது. இந்த நார்ச்சத்தானது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான உறுப்புகள் சீராக இருப்பதற்கு உதவிகரமாக அமைகிறது. கொண்டைக்கடலை இதில் கருப்பு வெள்ளை என இரண்டு வகைகளில் இருக்கும் இந்த இரண்டு வகைகளிலும் ஒரே மாதிரியான புரதங்கள் நிறைந்த புரதச்சத்து அதிகம் உள்ள சைவ உணவுகள்.