விநியோகஸ்தர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு!

Photo of author

By Vinoth

விநியோகஸ்தர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு!

வாரிசு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் தில் ராஜு.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இன்னும் ஒரு ஆக்‌ஷன் காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடந்து வரும் ’வாரிசு’ படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் வாரிசு படத்தின் வியாபாரத்தை தில்ராஜு தொடங்கியுள்ள நிலையில் சில தமிழக விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முயற்சி செய்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களிடம் படத்தின் விலையாக மிகப்பெரிய தொகையை சொல்லியுள்ளார் தில் ராஜு. அதுமட்டுமில்லாமல் மொத்த தொகையில் 70 சதவீதம் அளவுக்கு முன்பே அட்வான்ஸாக கொடுத்துவிட வேண்டும் எனவும் கண்டீஷன் போட்டுள்ளாராம். இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இடையில் பொங்கல் அன்று அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாவதால் வாரிசு படத்தின் வசூல் கணிசமாக குறையவும் வாய்ப்புள்ளது.