“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!

0
88

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை. தான் புறக்கணிக்கப்பட்டாலும், யாருடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் மாலிக் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை சென்றது.

டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப் படாதது குறித்து பேசும் போது  பாகிஸ்தானின் தற்போதைய மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் ஆசாம்  மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆட்டமிழந்துவிட்டால் பாகிஸ்தான் பேட்டிங் தடுமாறுகிறது.

அணித் தேர்வு குறித்து பேசியுள்ள மாலிக் “எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதுதான் எனது வேலை. என்னை அழைத்துப் போகலாமா வேண்டாமா என்பது டீம் மேனேஜ்மென்ட் எடுக்கும் முடிவு. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை சிறப்பாகப் பயன்படுத்த முயற்சிப்பேன். யாருடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மேலும் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல, ஏனெனில் நேர்மறையாக இருப்பது எனது தொழில் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

நான் பாபர் ஆசாமுடன் முன்பு தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். நாங்கள் அதிகம் பேசினோம், ஆனால் இப்போது அவர் ஒரு கேப்டன், அவருக்கான நேரத்தைக் கொடுக்கவேண்டும்.. நானும் இதை கடந்துவிட்டேன், நான் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, அவரை [என்னைத் தேர்ந்தெடுக்க] எப்போதும் முயற்சி செய்து சமாதானப் படுத்த முயன்றதில்லை.” என்று அவர் மேலும் கூறினார்.