நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும்

Photo of author

By Anand

நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும்

சமீப காலமாக திருமண வயதை தாண்டிய பலருக்கும் திருமணம் ஆகாமல் தடைப்பட்டு வருவது அதிகமாகியுள்ளது.இதற்கு காரணமாக பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளதை காரணமாக கூறினாலும்,சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதக அமைப்பே இதற்கு முதற்காரணம் என்று பலராலும் நம்பபடுகிறது.இவ்வாறு திருமண தடை உள்ளவர்கள் அந்த தடை நீங்க இதற்கான குறிப்பிட்ட சில ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கும் என்று கூறுகின்றனர்.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அங்கு வாழ்ந்த குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து ‘குஜிலியம்பாறை’ என அந்த ஊரானது அழைக்கப்பட்டது.

இந்த குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் தான் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. தோஷம் அல்லது ஜாதக குறைபாடு காரணமாக நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.

இந்த கோவிலில் திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி மற்றும் பணவரவு ஏற்படும். மேலும் இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று ஜாதக தோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும்.

ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள் கோவில்
ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள் கோவில்

கோவிலின் வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் அவர்கள் மேற்கொள்ளும் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி அவர்களின் வாழ்வில் சுகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.