ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை

0
221

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை

நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார்.

நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, பாண்டியா பேட்டிங்கில் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். அவரின் ஆல்ரவுண்ட் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இறுதி ஓவரில் பரபரப்பான கட்டத்தில் பொறுமை இழக்காமல், பாண்டியா நிதானமாக நான்காவது பந்தில் சிக்ஸர் விளாசி போட்டியை ஸ்டைலாக முடித்தார். போட்டி முடிந்ததும் எதிர்புறத்தில் இருந்த சக வீரர் தினேஷ் கார்த்திக் பாண்ட்யாவுக்கு மரியாதை செய்யும் விதமாக தலைகுணிந்து அவரின் ஆட்டத்தைப் பாராட்டினார். இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக ஐபிஎல் தொடரில் தோனி இதுபோல பரபரப்பான போட்டியை திரில் வெற்றியாக முடிக்க, அப்போது பெவிலியனில் இருந்து வந்த ஜடேஜா இதுபோல தலைகுணிந்து மரியாதை செய்தது இணையத்தில் வைரல் ஆனது.

Previous articleகிளாமர் ரூட்டுக்கு திரும்பும் பிரேமம் பட நாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
Next articleரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here