தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!

0
231

தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதையடுத்து 191 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின், ஹர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக நியமிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Previous articleபாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ!
Next articleரோஹித் ஷர்மாவின் வித்தியாசமான பவுலிங் கூட்டணி… ஆனாலும் வொர்க் அவுட் ஆன ஐடியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here