முதுகுவலியால் அவதிப்படும் தினேஷ் கார்த்திக்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

0
191

முதுகுவலியால் அவதிப்படும் தினேஷ் கார்த்திக்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதுகுவலி காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள்தான். சூர்யகுமார் யாதவ்வை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. அதே போல தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுலும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பீல்டிங்கின் போது அவர் முதுகுவலி காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக கடைசி சில ஓவர்கள் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடாத முதுகுவலியாலும் அவதிப்படும் தினேஷ் கார்த்திக் அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிஷப் பண்ட்டை இறக்கும் பட்சத்தில் அவர் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் இந்திய பேட்டிங்குக்கு கூடுதல் பலமாக அமையும். ஏனென்றால் இந்திய பேட்டிங்கில் அனைத்து பேட்ஸ்மேன்களும், வலது கை பேட்ஸ்மேன்கள்தான். இது எதிரணி பவுலர்களுக்கு பலமாக அமைந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Previous articleபருவமழை எதிரொலி: தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleவிஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்!