இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

0
365
Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?
Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மறுப்பதாக தெரிவித்தது. இந்த மனு மீதான விசாரணையில் புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ என்பது தமிழ் எழுத்து அவ்வளவுதான். ஆனால் தமிழ் வார்த்தை இல்லை அதற்கு பொருளும் இல்லை ஐ  என்பது ஆங்கில வார்த்தை அதாவது கண் என பொருள்படும் அது எப்படி தமிழ் வார்த்தை ஆகும் எழுத்து மட்டும் தமிழில் இருந்தால் போதாது என்று கூறினார்.

மேலும் பட தயாரிப்பு தரப்போ ஐ என்பது வியப்பு மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எனவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டது. ஐ பெயரில் தமிழ் எழுத்து வார்த்தை பயன்படுத்தியதை காரணம் காட்டி வரி விலக்கு சலுகை கோர முடியாது நிமிடங்கள் பூர்த்தியாகிருக்க  வேண்டும் என தெரிவித்து இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Previous articleஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! 
Next articleஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?