ஆதவ் அர்ஜுனாவை சதி விலகியது என கூறிய இயக்குனர் அமீர்!!

Photo of author

By Vinoth

சென்னை: டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழ நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த திடலில் ஆதவ் அர்ஜுனா பேசிய 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிந்தது புதிய திருப்பம் ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அரசியல் வட்டாரத்தில்.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் ஆதவ் அர்ஜுனவை கட்சியில் இருந்து 6 மாதம் இடைநிக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், ஆனால் ஆதவ் அர்ஜுனா தான் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்து இருந்தார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார். அதில் “நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில் “கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தநிலையில் ஆதவ் அர்ஜுனா வி.சி.க-வில் இருந்த விலகியது குறித்து இயக்குனர் அமீர் கருத்து ஓன்று தெரிவித்துள்ளார். “தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்ப டுத்தி விட்டது. அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே” என அவர் கூறியுள்ளார்.